Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

படிப்படியாக தண்ணீர் திறக்க வேண்டும்…. ஆந்திரா பொதுப்பணித்துறைக்கு அதிகாரிகள் கோரிக்கை….!!!!

பிச்சாட்டூர் அணையில்  இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவை  குறைக்க வேண்டும் என ஆந்திர அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆந்திர பிரதேசத்தில்  பிச்சாட்டூர் அணை உள்ளது. இந்த அணை நிரம்பினால் உபரி நீர் மதகுகள் வழியாக ஆற்றில் திறந்து விடப்படுவது வழக்கம். அந்த தண்ணீர் ராமகிரி, சுருட்ட பள்ளி, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், பாலேஸ்வரம், காரணி, மங்கலம் ஆகிய வழியாக சென்று கடலில் கலக்கிறது. இந்த அணையின் உயரம் 31 அடி ஆகும். இதில் வடகிழக்கு பருவமழை மற்றும் மாண்டாஸ்  புயல் காரணமாக பலத்த மழை பெய்ததால் ஆணை  முழுவதும் நிரம்பியது. இதனால் கடந்த 9-ஆம் தேதி உபரி நீர் ஆரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

தற்போது அதிகபட்சமாக வினாடிக்கு 8 ஆயிரம்  கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் கரையோரம் உள்ள 20 கிராமங்களில்  சேதம் ஏற்பட்டது. மேலும் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் வசிக்கும்  மக்கள் பள்ளிகளிலும், சமுதாய கூடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பணியாளர் முத்தையா, அதிகாரி ஜெயக்குமாரி, வெற்றிவேலன், ஜெயக்குரு, பாலசுந்தரம், கண்ணன், சரவணன், புவனேஸ்வரி உள்ளிட்ட பலர் நேற்று அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்நிலையில் அணையில் இருந்து உபரி நீர் திறக்கும் போது அரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சேதம் ஏற்படுகிறது. எனவே இதனை தடுக்க படிப்படியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று ஆந்திரா  பொதுப் பணித்துறைக்கு  அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |