நடிகை சமந்தா ஆரம்பகாலக்கட்டத்தில் தான் அனுபவித்த கஷ்டங்கள் பற்றி கூறியுள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவரிடம் தற்போது “காத்துவாக்குல ரெண்டு காதல்”, “சாகுந்தலம்”, “யசோதா”என கைவசம் நிறைய படங்கள் உள்ளன. இவர் சினிமா துறைக்கு வரும் முன், தான் இருந்ததைப் பற்றி கூறியிருக்கிறார். “நான் படிப்பில் முதல் மாணவியாக இருந்தேன். வறுமையின் காரணமாக படிப்பை பாதியில் நிறுத்த வேண்டியதாயிற்று.
சினிமாவிற்கு வருவதற்கு முன் பெரிய நிகழ்ச்சிகளில் வரவேற்கும் பெண்ணாகப் பணிபுரிந்தேன். அதற்காக அவர்கள் தினமும் 500 ரூபாய் ஊதியமாக தருவார்கள். சில நேரம் வருவாய் இல்லாத போது ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே உணவு உண்டேன். இந்த கஷ்டத்தை நான் இரண்டு மாதங்களுக்கு அனுபவித்தேன். வருவாய்க்காக மாடலிங் செய்யலாம் என எண்ணியபோது குடும்பத்தினரே உனக்கு இது தேவையா என கேள்வி கேட்டனர். அண்மையில் கூட பெரிய பிரச்சனையை சந்தித்தேன். நண்பர்கள் மற்றும் டாக்டர்களின் உதவியோடு பிரச்சனையிலிருந்து மீண்டு வந்தேன்” என சமந்தா கூறியிருக்கிறார்.