நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள ராஜலிங்கபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியான முத்துக்குமார் என்பவரின் மகள் பாப்பா(18). இவர் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த நிலையில், அவரை தனியார் கல்லூரியில் பி.எஸ்சி பட்டப்படிப்பில் சேர்த்துள்ளார். இதற்காக 12 ஆயிரம் ரூபாய் கல்லூரி கட்டணத்தை இரண்டு தவணைகளாக முத்துக்குமார் செலுத்தியுள்ளார். கூலித் தொழிலாளி என்பதால் கையில் இருந்த பணம் முழுவதும் மகளின் படிப்புக்காக செலவழித்துவிட்டு, குடும்ப செலவுக்கு போதிய பணம் இன்றி தவித்து வந்துள்ளார்.
தன்னை படிக்க வைப்பதற்காக பெற்றோர்கள் சிரமப்படுவதை பார்த்து மாணவி பாப்பா மன வேதனை அடைந்துள்ளார். இந்த நிலையில், நேற்று(ஜூலை 26) மாலை பெற்றோர் இருவரும் வெளியே சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த மாணவி பாப்பா “கல்வி கட்டணம் கட்ட முடியாமல் பெற்றோர் சிரமப்படுவதால், இந்த முடிவை எடுத்துள்ளேன். தன்னுடைய மரணத்தில் எந்த ஒரு மர்மமும் இருக்க கூடாது என்பதற்காகவே இந்த கடிதம்” எழுதியிருப்பதாக குறிப்பிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வீடு திரும்பிய பெற்றோர் மாணவி தற்கொலை செய்து கொண்டதை பெரும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் காவல்துறைக்கு தகவல் அனுப்பப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மாணவி உடலை கைப்பற்றி பிரதேச பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.