கொரோனாவக்கு பிறகு பள்ளி மாணவர்கள் டியூஷனுக்கு செல்வது சுமார் 10% அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.
கொரோனாவுக்கு முன்பு 2018 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 30% குறைவான பள்ளி மாணவர்கள் தனியாரிடம் டியூஷன் சென்று படித்து வந்தனர். இந்தநிலையில் தற்போது சுமார் 40% மாணவர்கள் தனியார் டியூசனுக்கு செல்வதாக வருடாந்திர கல்வி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கேரளாவை தவிர, மற்ற அனைத்து மாநிலங்களிலும் தனியாரிடம் டியூசன் செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து இருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது. கொரோனா காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெற்று வந்ததால், கற்றல் இடைவெளியை போக்கும் விதமாக மாணவர்களை டியூசனுக்கு அனுப்புவது அதிகரித்துள்ளது.