Categories
மாநில செய்திகள்

படிப்பை தொடர முடியாத…. பலரின் நிலையை கருத்தில் கொண்டது தான் புதிய கல்விக் கொள்கை…. உயர்நீதிமன்றம் கருத்து..!!

பல்வேறு காரணங்களால் படிப்பை தொடர முடியாத பலரின் நிலையை கருத்தில் கொண்டது தான் இந்த புதிய கல்விக் கொள்கை என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது..

திண்டுக்கல்லை சேர்ந்த வஹிதா பேகம் கடந்த 22.01.2011 இல் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சிறப்பு அலுவலராக தொலைதூரக் கல்வித் திட்டத்தின் திண்டுக்கல் மையத்தில் நியமிக்கப்பட்டார். நிர்ணய தகுதியை வஹிதா பெறவில்லை என்பதாலும், திறந்த நிலை பல்கலைக்கழக பட்டம் பொது நியமனத்திற்கு பொருந்தாது எனவும் கோரி கடந்த 2016 இல் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

கடந்த 2017ல் இவரது சிறப்பு அலுவலர் நியமனத்தை ரத்து செய்து ஆய்வகப் பணியாளராக 2011 முதல் பதவி இறக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து வஹிதா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி எஸ் ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் மனுதாரர் எஸ்.எஸ்.எல்சி, ப்ளஸ் 2, டிப்ளமோ, எம்ஏ, எம்.பில் பிஏ என்ற வரிசையில் படிப்பை படித்துள்ளார். 10th, +2, +3 என்ற விகிதத்தில் படிக்கவில்லை.. எம்.ஏ படித்து திறந்த நிலை கல்வி திட்டத்தில் தான் படித்துள்ளார். இந்த நியமனத்திற்கு இது பொருந்தாது என கூறப்பட்டது.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது, மனுதாரர் கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக சிறப்பு அலுவலராக பணியாற்றியுள்ளார். எம் ஏ முடித்த பிறகு எம்.பி.ஏ பட்டம் பெற்றுள்ளார்.. அண்ணாமலை பல்கலையை  அரசு ஏற்கும் வரையில் திறந்த நிலை கல்வி திட்டங்களானது ஏற்கப்படுகின்றன . திறந்த நிலை கல்வி தகுதி தொடர்பான அரசாணைக்கு முன்பு மனுதாரர் பட்டம் பெற்றுள்ளார்.. அண்ணாமலை பல்கலையின் திறந்த நிலை திட்டத்தின் கீழ் ஏராளமானோர் பட்டம் பெற்றுள்ளனர்.. அவர்களே வேலைவாய்ப்பு அறிவிப்பு  வெளியிட்டு பணி நியமனமும் செய்துள்ளனர்..

மனுதாரரும் அப்படித்தான் நியமனத்திற்கு ஆளாகியுள்ளார். 04.04.2013க்கு முன்னதாக நடந்த நியமனங்களை தொந்தரவு செய்ய வேண்டியதில்லை. மனுதாரரின் நேரமும், உழைப்பும் வீணாகியுள்ளது.. முறையான கொள்கை முடிவுகள் இல்லாததால் தான் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்பதை நீதிமன்றம் வருத்தத்துடன் பதிவு செய்கிறது என்று கூறினார்.

அதனை தொடர்ந்து இளங்கலை பட்டம் பெற்ற பிறகு முதுகலை பட்டம் பெற வேண்டும் என்ற இந்த வரையறையும் அண்ணாமலை பல்கலையில் இல்லை. போதுமான அடிப்படை தகுதியின்றி உயர்கல்விக்கான தகுதியை எதிர்பார்க்க முடியாது. வேலைவாய்ப்புக்கு தகுதி இல்லாதபோது ஏன் இந்த கல்விமுறையை  வழங்க வேண்டும் என கேள்வி எழுப்பினார்.

அதனை தொடர்ந்து மாணவர்கள் முன்னேற்றத்திற்கான பாட நெறியை பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் வேலை வழங்குவோர் ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டும். கல்வித்தகுதியை நிர்ணயித்து புதிய கல்வி கொள்கை  வகுக்கப்பட்டுள்ளது. இளங்கலை முதல் முதலாம் ஆண்டு இரண்டாம் ஆண்டு என முடிப்பவரின் தகுதியையும், ஆண்டுதோறும் படிப்பை முடித்தவரின் தகுதியையும் அங்கீகரித்துள்ளது குடும்ப சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால்  படிப்பை தொடர முடியாத நிலையை கருத்தில் கொண்டு தான் இந்த புதிய கல்விக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது என கருத்துக்கள் தெரிவித்தனர்.

 

Categories

Tech |