Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

படியில் தொங்கியபடி பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள்…. அதிகாரிகளுக்கு பெற்றோர்கள் விடுத்த கோரிக்கை….!!!!

பேருந்தின் படியில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்வதால் கூடுதல் பேருந்துகள் இயக்க பெற்றோர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள சேரிபாளையம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று  அமைந்துள்ளது. இந்த பள்ளியில் கிணத்துக்கடவு, தாமரைக்குளம், மாசநாயகன்புதூர், நல்லடிபாளையம், கோடங்கிபாளையம், பட்டணம், செட்டிங்காபாளையம், தேவனாம்பாளையம், எம்மேகவுண்டன்பாளையம், வடக்கு காடு, குளத்துப்பாளையம், கப்பலாங்கரை, செட்டிபுதூர், ஆண்டிபாளையம், வஞ்சிபாளையம், மஞ்சம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 850-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேருந்தின் மூலம் பயணம் செய்து  படிக்கின்றனர்.

ஆனால் போதுமான பேருந்து வசதிகள் இல்லாததால் மாணவர்கள் பேருந்தின் படிகளில் தொங்கி ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். இதனால் பெற்றோர் மிகவும் கவலை அடைகின்றனர். மேலும் இது குறித்து பெற்றோர் கூறியதாவது.  பேருந்தில் அதிக அளவிலான  பயணிகள் ஏறுகின்றனர். மேலும் பட்டணம்  பகுதி வரும்போது பேருந்தில் இடம் இல்லாததால் மாணவர்கள்  படியில் தொங்கிய நிலையில்  பயணம் செய்கின்றனர். இந்நிலையில் பேருந்துகள் அடிக்கடி பழுதாகி நிற்கிறது. எனவே காலை, மாலை ஆகிய இரு வேலைகளிலும் கிணத்துக்கடவில் இருந்து சேரிப்பாளையம் அரசு பள்ளி வரை கூடுதலாக பேருந்துகள் இயக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |