Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

படுகொலை செய்யப்பட்ட பெண்…. மர்ம நபர்களின் வெறிச்செயல்…. அரியலூரில் பரபரப்பு…!!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வெங்கனூர் கிராமத்தில் ராசாத்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட முனியப்பன் சில மாதங்களிலேயே இறந்து விட்டார். இதனால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ராமகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவரும் உயிரிழந்தார். இந்நிலையில் ராமகிருஷ்ணனின் குடும்பத்தின் மீது ராசாத்தி ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் 11 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் தர உத்தரவிட்டது. அதன் பிறகு ராசாத்தி 11 லட்சம் ரூபாயை ஜீவனாம்சமாக பெற்றுள்ளார். அந்த வழக்கு தொடர முதல் கணவர் முனியப்பனின் தம்பி மனைவி உதவியாக இருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது வழக்குக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவாகியது என கூறி அந்த பெண் ராசாத்தியிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் ராசாத்தி படம் கொடுக்க மறுத்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. நேற்று மாலை ராசாத்தி வெங்கனூர் சுடுகாடு அருகே வெட்டி கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ராசாத்தியின் உடலை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் ராசாத்தி கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன? மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |