நடிகை லட்சுமி ராயின் தோழியும் பிகினி போட்டோஸ் க்கு பெயர் போனவருமானவர் பிரபல கவர்ச்சி நடிகை ஷாமா சிக்கந்தர். இவர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தன்னுடைய துணிச்சலான பேச்சின் மூலமாக பாலிவுட்டை அதிர வைத்து வருகிறார். இந்த நிலையில் முன்பு நடிக்க வாய்ப்பளிக்க பல இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் படுக்கைக்கு கூப்பிட்டு நிர்ப்பந்தித்ததாக பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை ஷாமா சிக்கந்தர் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
வாய்ப்பு வேண்டுமானால் தங்களிடம் உறவு வைத்துக்கொள்ள தொந்தரவு செய்ததாகவும், ஆனால் தற்போது அந்த நிலை மாறி பெரும்பாலான இயக்குநர்கள் பெண் கலைஞர்களை மதிப்புடன் நடத்துவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த பேட்டி தற்போது பாலிவுட்டில் புயலை கிளப்பியுள்ளது.