Categories
சேலம் மாவட்ட செய்திகள்

படுக்கையறைக்குள் சிக்கி துடித்த 3 வயது குழந்தை… போராடி மீட்ட தீயணைப்புத்துறை..!!

சேலத்தில் படுக்கை அறையில் சிக்கிக்கொண்ட காவலரின் மூன்று வயது மகளை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். 

சேலம் மாநகர காவல் துறையில் காவலராக பணியாற்றி வருபவர் சக்தி. இவர் சேலம் 4 ரோடு அருகில் வசித்து வருகிறார். இவருக்கு மூன்று வயதில் வர்ஷித்தா என்ற பெண் குழந்தை உள்ளது. நேற்று இரவு சக்தி வெளியே சென்ற பொழுது வீட்டில் மனைவியும், குழந்தையும் இருந்துள்ளனர்.

Image result for கதவை உடைத்து காப்பாற்றிய தீயணைப்பு

அப்பொழுது வர்ஷிதா விளையாட்டாக படுக்கை அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டார். பின்னர் கதவை திறக்க முயற்சித்தபோது முடியாததால் பயத்தில் அலறி துடித்தார். இது குறித்து  தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து அரை மணி நேரம் போராடி குழந்தையை மீட்டனர். வெளியே வந்த வர்ஷித்தா தனது தந்தையை கட்டி பிடித்து கதறி அழுதார். பின் அவர் அழுகை நிறுத்தப்பட்டு சமாதானம் செய்யப்பட்டார்.

Categories

Tech |