Categories
தேசிய செய்திகள்

படுக்கையறையிலேயே காளாண் வளர்ப்பு… மஷ்ரூம் லேடியின் வெற்றிக்கதை… தெரிந்துகொள்வோம் வாருங்கள்..!!

பீகார் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் படுக்கையறையில் காளான் வளர்த்து வரும் மஷ்ரூம் லேடியாக மாறியுள்ளார்

பிகார் மாநிலத்தை சேர்ந்தவீணா தேவி என்ற நபர் காளான்களை பயிரிடுவதில் புகழ் பெற்றவர். இவர் படுக்கை அறையிலேயே காளான்களை பயிரிட்டு வருகிறார் .குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் உள்ளிட்டோரும் இதற்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

உலகில் பல்வேறு துறைகளில் பெண்கள் அசாத்திய திறமைகளை வெளிக் காட்டி வருகின்றனர் காட்சிப் பொருளாக ஆண்கள் அருகில் நின்ற காலம் மலையேறி தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்கி வருகின்றனர். அதேபோல பல பெண்கள் முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர். ஆண்களுக்கு பக்கபலமாக நின்று குடும்பத்தை நல்வழியில் கொண்டு வர படுக்கையறையில் காளான்களை பயிரிட்டு நாடு முழுவதும் மற்றும் திகழ்பவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த வீணா தேவி.

இவரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கௌரவப்படுத்தி ள்ளார். இதுமட்டுமின்றி இவர் நரேந்திர மோடி, பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார் ஆகியோரிடம் பாராட்டுக்களை பெற்றுள்ளார் தனது வறுமையை தோற்கடித்தது மட்டுமல்லாமல் 100க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்களை காளான் வளர்ப்பிற்கு ஊக்குவித்துள்ளார். அதே சமயம் 3500க்கும் மேற்பட்ட குடும்பங்களின் பொருளாதார நிலை மேம்படுபட பெரிதும் உதவியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: “இதுவரை 25 ஆயிரம் பெண்களுக்கு பயிற்சி கொடுத்து இருக்கேன். வீட்ல எப்படி காளான் வளர்க்கலாம்னு எல்லா நுணுக்கங்களையும் சொல்லிக் கொடுத்திருக்கேன். இன்னிக்கு நீங்க கொஞ்சம் முதலீடு செஞ்சா நாளைக்கு நல்ல லாபம் கிடைக்கும்னு ஊக்கப்படுத்தி இருக்கேன். கொரோனா காலகட்டத்திலும் பல மாநிலங்களில் இருக்கிற மக்கள் காளான் பயிரிடுவது பத்தி கேட்டாங்க அப்போ சாகுபடி செய்வது பற்றி சொல்லிக் கொடுத்து அவர்களை ஊக்கப்படுத்தி இருக்கேன்”.

முதலில் காளான் பயிரிடுவதற்கு இவருக்கு இடம் இல்லாத காரணத்தினால், வீட்டில் காலியாக இருந்த ஒரே இடமான படுக்கை அறையிலேயே காளான்கள் சாகுபடி செய்துள்ளார். இதற்காக தனது படுக்கையறையில் முழுவதையும் புடவைகள் சுற்றி அழகாக அமைத்துள்ளார். இவரின் வித்தியாசமான அணுகுமுறை மக்களுக்கு தெரிந்ததை தொடர்ந்து வேளாண் பல்கலைக்கழக குழுவினர் அவனது வீட்டிற்கு சென்ற அவரது சாதனைகளை படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பிரபலப்படுத்தினார்.

Categories

Tech |