Categories
சினிமா

படுக்கையறை காட்சி பற்றி கேள்வி… ஆவேசமாக பதில் கூறிய பிரபல நடிகை….!!

கேரள பெண்ணான மாளவிகா மோகனன் மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த “பட்டம் போல” படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பிறகு இவர் தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த “பேட்ட” படத்தில் நடித்தார். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான “மாஸ்டர்” படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து நடித்துள்ளார். இவர் தற்போது தனுஷின் நடிப்பில் வெளியான “மாறன்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. மாளவிகா மோகனன் சமூக வலைதளங்களில் மூலம் ரசிகர்களுடன் உரையாடுவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்.

இந்நிலையில் மாளவிகா மோகன் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர்கள் பலர் பலவிதமான கேள்விகளை எழுப்பினர். அதில் ரசிகர் ஒருவர் மாறன் படத்தில் தனுசுடன் படுக்கை அறை காட்சி எத்தனை படமாக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினார். இதற்கு கடுப்பான மாளவிகா உங்கள் மண்டைக்குள் மோசமான எண்ணம் உடைய இடம் இருக்கிறது என ஆவேசமாக பதில் அளித்துள்ளார். இவரின் இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |