கனடாவில் 13 வயதாகின்ற சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனட நாட்டில் பிராம்டனில் எமிலி வியாக்கஸ் என்ற 13 வயது சிறுமி வசித்து வந்தார். இந்நிலையில் இவர் 22 ஆம் தேதியன்று கொரோனா தொற்றால் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அவருடைய தந்தை கூறியதாவது, எமிலிக்கு இருமல் பிரச்சனை இருந்ததோடு மட்டுமல்லாமல் சுவாசிப்பதற்கும் சிரமப்பட்டு நிற்கக்கூட முடியாமல் இருந்தார். அதன்பின் வீட்டினுடைய படுக்கையில் எந்த விதமான உணர்ச்சியும் இல்லாமல் இருந்தாள். இதனையடுத்து நாங்கள் எமிலியை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு எமிலிக்கு கொரோனாவுடன் நிமோனியாவும் சேர்ந்து வந்ததால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார் என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.