Categories
சென்னை மாவட்ட செய்திகள்

படுக்கை அறையில் கேட்ட அலறல் சத்தம்…. காதல் கணவரின் கொடூர செயல்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

மனைவியை கணவர் கொடூரமாக குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள தண்டையார்பேட்டை வ.உ.சி நகரில் மீனவரான தளபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் கப்பலில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சண்முகப்பிரியா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 30 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இதில் இளைய மகனான அருண் என்பவர் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கறிஞராக இருக்கிறார். இந்நிலையில் அருண் வீட்டிற்கு வந்தபோது படுக்கையறையில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அருண் அங்கு சென்று பார்த்துள்ளார்.

அப்போது தனது தந்தை சண்முகப்பிரியாவை கத்தியால் குத்தி கொண்டிருப்பதை பார்த்து அருண் அதிர்ச்சி அடைந்தார். அருண் வந்ததை பார்த்ததும் தளபதி கத்தியை கீழே போட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதனையடுத்து அருண் படுகாயமடைந்த தனது தாயை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தளபதியை கைது செய்து நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது.

அதாவது கடந்த 4 ஆண்டுகளாக மது போதைக்கு அடிமையான தளபதி தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். வழக்கம் போல குடித்து விட்டு வீட்டிற்கு வந்து சாப்பாடு போடுமாறு தளபதி சண்முகபிரியாவிடம் கேட்டுள்ளார். அதற்கு வேலைக்கு போகாமல் தினமும் குடித்துவிட்டு வருகிறாய்… உனக்கெல்லாம் சாப்பாடு ஒரு கேடா…?என சண்முகப்பிரியா தனது கணவரை கண்டித்துள்ளார். இதனை அடுத்து சாப்பிட்டு விட்டு மது போதையில் படுக்கை அறைக்கு சென்ற தளபதி தூங்கிக் கொண்டிருந்த சண்முகப்பிரியாவை கொடூரமாக குத்தி கொலை செய்தது தெரியவந்துள்ளது.

Categories

Tech |