நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனாவிற்கு சாமானிய மக்கள் மட்டுமில்லாம அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள், மருத்துவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை, ஆக்சிஜன் இல்லை, தடுப்பூசிகள் இல்லை, ஆபத்து என்று அழைத்தால் பிரதமர் அலுவலகத்தில் பிரதமரும் இல்லை என்பதே கசப்பான நிதர்சனம் என்று மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல் விமர்சனம் செய்துள்ளார்கள். அதிகாரத்தை மட்டும் கையில் வைத்திருப்பது கேலிக்குரியது என்று தெரிவித்துள்ளார்.