Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“படுத்தவுடன் தூக்கம் வரணும்”…. இளைஞரின் நூதன திருட்டு…. ஏமாந்த ஜவுளிக்கடைகாரர்…!!

டிப்டாப் இளைஞர் தலையணை வாங்குவது போல் நடித்து ஜவுளிக்கடைக்காரரை ஏமாற்றி பணத்தை திருடி சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி அருகே நாசரேத்தை சேர்ந்தவர் தர்மராஜ். இவர் அப்பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இக்கடைக்கு சம்பவத்தன்று காலை டிப்டாப் உடையணிந்த இளைஞர் ஒருவர் வந்துள்ளார். அந்த இளைஞர் கடைக்காரரிடம் நான் தலையணை வாங்க வந்ததாகவும் எனக்கு படுத்தவுடன் தூக்கம் வருமாறு தலையணை வேண்டும் என்றும் கேட்டுள்ளார். இதனால் தர்மராஜ் கடையில் உள்ள அனைத்து தலையணைகளையும் எடுத்து காண்பித்துள்ளார்.

அதில் திருப்திடையாத  அந்த இளைஞர் இன்னும் கலர்ஃபுல்லாக காட்டுங்க என்று தர்மராஜிடம் கூறியுள்ளார். இதையடுத்து தர்மராஜ் அந்த வாலிபரிடம் நீங்கள் 5 நிமிடம் உட்காருங்கள் நான் குடோனில் இருந்து உங்களுக்கு பிடித்த மாதிரி தலையணை எடுத்து வருகிறேன் என்று கூறி சென்றுள்ளார். அச்சமயம் கடையில் தனியாக இருந்த அந்த இளைஞர் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.10,000 பணத்தை எடுத்து விட்டு தப்பி ஓடியுள்ளார்.

இதையறிந்த தர்மராஜ் அந்த இளைஞர் குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்து அதில் பதிவாகியுள்ள அந்த இளைஞரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |