மீண்டும் ரஜினி மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் படையப்பா 2 உருவாக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது கடைசியாக நடித்த திரைப்படம் அண்ணாத்த. இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் ரஜினி அடுத்த திரைப்படத்தில் நெல்சன் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என அண்மையில் தகவல் வெளியானது. இந்நிலையில் தலைவர் 170 திரைப்படத்தை கே.எஸ் ரவிக்குமார் இயக்க உள்ளதாக கூறப்படுகின்றது.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் “படையப்பா” திரைப்படம் ரஜினி நடிப்பில் வெளியானது. தற்போது “படையப்பா 2” மீண்டும் இவர்கள் கூட்டணியில் உருவாக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுரித்து அதிகாரபூர்வமான தகவல் இதுவரையில் வெளிவரவில்லை.