Categories
தேசிய செய்திகள்

“பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதி”…. குழந்தைகளுக்கு இது அவசியம்…. சோனியா காந்தி பேச்சு….!!!!!

கொரோனாவுக்கு பின் பள்ளிகளுக்கு திரும்பி வரும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துடைய உணவு தேவைப்படுவதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மக்களவையில் வலியுறுத்தி இருக்கிறார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மக்களவையில் உரையாற்றியபோது, கொரோனா பரவல் காரணமாக நாட்டிலுள்ள குழந்தைகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் பள்ளிகள் மூடப்பட்டு தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பள்ளிகள் மூடப்பட்டிருந்தபோது மதிய உணவு வழங்குவதும் நிறுத்தப்பட்டது.

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மக்களுக்கு ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் குழந்தைகளுக்கு உலர் உணவு மற்றும் சமைத்த உணவுக்கு மாற்றாக எதுவும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையில் குழந்தைகளின் பெற்றோர்கள் வாழ்வாதாரத்திற்காக பெரும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர். சில வருடங்களுக்கு முன்பு வரையிலும் இதுபோன்ற நெருக்கடியை சந்தித்ததில்லை. தற்போது குழந்தைகள் மீண்டும் பள்ளிகளுக்கு திரும்பி வரும் நிலையில், அவர்களுக்கு சிறந்த ஊட்டச்சத்துடைய உணவுகள் தேவைப்படுகிறது” என்று பேசினார்.

Categories

Tech |