Categories
மாநில செய்திகள்

பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவு…. இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்புகள்…. எதிர்பார்ப்பில் தமிழக மக்கள்….!!!!

தமிழகத்தில் தற்போது சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கிறது. கடைசி நாளான இன்று  திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, பொதுத்துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை, மாநில சட்டசபை, ஆளுநர் மற்றும் அமைச்சரவை, நிதித்துறை, மனிதவள வேளாண்மை துறை ஆகிய துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதமும் துறை சார்ந்த அறிவிப்புகள் வெளியாக உள்ளன.

இதில் 110 விதியின் கீழ் நகை கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. இதுமட்டுமல்லாமல் திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட வாக்குறுதிகள் தொடர்பான அறிவிப்புகளும் இன்று வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் தமிழக மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Categories

Tech |