தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அனைத்து மாவட்டங்களிலும் மாதம் மற்றும் வாரம் தோறும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.அவ்வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி ஆசிரியர்களை தேர்வு செய்யும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாமில் இளங்கலை, முதுகலை பட்டம், Bed, Med, MPhil கல்வித் தகுதி உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம்.மேலும் கல்வியியல் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கும் வாய்ப்பு உண்டு. முகாமில் பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் www.tnschoolteachers.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.