நாட்டிலுள்ள அனைத்து ஆரம்ப பள்ளிகளிலும் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும் அதனைப் போலவே உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதாசார அடிப்படையில் பள்ளிகள் இயங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் அவ்வபோது ஆசிரியர்கள் பணி மாறுதல் செய்யப்படுகின்றன. அதன்படி நடப்பு ஆண்டிற்கான பணி நிரவல் கலந்தாய்வு வருகின்ற நவம்பர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. நடப்பு ஆண்டில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு பட்டதாரி மற்றும் முதல்நிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் குறித்த தகவல்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் உபரி பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் கூடுதல் தேவை உள்ள பள்ளிகளில் ஆசிரியர் பணி நிரவல் செய்யப்பட உள்ளனர். அதற்கான கலந்தாய்வு வருகின்ற நவம்பர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் பட்டதாரிகளுக்கு 28ஆம் தேதியும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு 29ஆம் தேதியும் ஆன்லைன் மூலமாக கலந்தாய்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு நவம்பர் 28ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்நிர்வாக காரணங்களுக்காக அது டிசம்பர் ஒன்பதாம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளி கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் ஆசிரியர்களுக்கான பணி நிரவல் திட்டமிட்டபடி நவம்பர் 29ஆம் தேதி நடைபெறும் என அவர் அறிவித்து வெளியிட்டுள்ளார்.