Categories
தேசிய செய்திகள்

பட்டதாரி இளைஞர்களுக்கு குட் நியூஸ்…. 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு…. சூப்பர் அறிவிப்பு….!!!!

2022 ஆம் ஆண்டு ஐடி துறையில் வேலை வாய்ப்புகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது பிரபல ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், விப்ரோ மற்றும் இன்போசிஸ் நடப்பு நிதியாண்டில் 1 லட்சம் ஊழியர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனங்கள் சமீபத்தில் தங்கள் மூன்றாம் காலாண்டு முடிவுகளை அறிவித்தபோது புதிய நியமனங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது. கடந்த ஆண்டில் இந்த நிறுவனங்கள் தங்களின் முன்னேற்றத்தை தொடர்ந்து 2022 ஆம் நிதியாண்டில் பணியமர்த்தல் முடிவை தொடர இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வேலைதேடும் இளைஞர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |