நிதி நிறுவனங்களில் பொய் கூறி 17 லட்சத்தை மோசடி செய்த பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள வி.நகர் பகுதியில் பிரேம்குமார்(31) என்பவர் வசித்து வருகிறார். எம்.சி.ஏ. பட்டதாரியான இவர் கடந்த 15ஆம் தேதியில் அப்பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்திற்கு சென்று, தனக்கு சொந்தமான நகைகளை சேலம் மாவட்டத்தில் ஒரு வங்கியில் அடகு வைத்திருப்பதாகவும், அதனை மீட்டு உங்களுடைய நிதிநிறுவனத்தில் அடமானம் வைப்பதாக கூறி 3 லட்சத்தி 80 ரூபாய் கடன் பெற்றுள்ளார்.
இதே காரணத்தை கூறி 17ஆம் தேதி ராசிபுரம் நகைக்கடை ஒன்றில் 5 லட்சமும், 19ஆம் தேதி சென்னையில் 2 தனியார் நிறுவனத்தில் 5 லட்சம் என மொத்தமாக 16 லட்சத்தி 90 ஆயிரம் வாங்கியுள்ளார். இந்நிலையில் பணம் வாங்கி கொண்ட பிரேம்குமார் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வந்ததால் நிதி நிறுவனத்தினர் பிரேம்குமார் மீது புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்ததில் பிரேம்குமார் பொய் கூறி பணத்தை மோசடி செய்தது தெரியவந்த நிலையில் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.