சென்னை தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி சத்யா(20). இவரை சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஓடும் ரயில் முன்பு ஆதம்பாக்கம் பகுதி சேர்ந்த சதீஷ்(23) என்பவர் தள்ளிவிட்டு கொலை செய்துவிட்டு தப்பி ஓடினார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரயில் நிலையத்தின் முன்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து அங்கு வந்து கொண்டிருந்த மின்சார ரயில் முன்பு சத்யாவை சதீஷ் தள்ளி விட்டுள்ளார்.
இதனால் தண்டவாளத்திலேயே உடல் நசுங்கி சத்யா உயிரிழந்தார். இது குறித்து ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். பட்டப்பகலில் ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.