விழுப்புரத்தில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரின் மனைவி பட்டப்பகலில் மர்ம நபர்களால் எரித்துக்கொல்லப்பட்டார்.
விழுப்புரம் சுதாகர் நகரில் வசித்து வரும் நடராஜன் வெளியூர் சென்று விட்டு வீடு திருப்பிய போது அவரது மனைவி அடித்தும் ,எரித்தும் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளார் .நடராஜன் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று உடலைக் கைப்பற்றி விசாரித்த போலீசார் அவர் அணிந்திருந்த 8சவரன் அணிகலன் மற்றும் காதணி போன்ற ஆபகரணங்கள் கொள்ளை போனதை தெரிவித்தனர் .கொலை செய்யப்பட்ட இந்திரா தனது வீட்டுக்கு அருகே பெட்டிக்கடை நடத்தி வந்ததோடு வட்டிக்கும் பணம் கொடுத்து வந்துள்ளார் .பணம் கொடுத்த பிரச்சனையில் இந்திரா கொல்லப்பட்டாரா அல்லது கொள்ளை அடிக்கும் நோக்கத்தில் கொலை நடந்ததா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர் .மேலும் அவரது கணவர் நடராஜன் மீதும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் அவரும் விசாரணை வளையத்தில் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .