Categories
உலக செய்திகள்

பட்டப்பகலில் கடத்த முயன்ற நபர்… சாதூர்யமாக தப்பிய இளம்பெண்.. சிசிடிவி காட்சியை வைத்து தேடும் போலீசார்..!!

பட்டப்பகலில் இளம் பெண்ணை கட்டாயப்படுத்தி கடத்த முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

லண்டனில் இருக்கும் வாட்டர்லூ ரயில் நிலையத்தில் கடந்த புதன்கிழமை அன்று மதியம் 2.30 மணி அளவில் இளம்பெண் ஒருவர் தனியாக நின்று இருந்தார். அப்போது அவர் அருகில் வந்த நபரொருவர் அந்தப் பெண்ணிடம் தனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் எனக் கூறி தொந்தரவு செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து அந்தப் பெண் அங்கிருந்து வேகமாக கிளம்பி விட்டார். ஆனால் அந்த நபர் விடாமல் அந்த பெண்ணை பின்தொடர்ந்து டிக்கெட் வாங்கும் எந்திரம் அருகே தனது Oyster Card-க்கு டாப் அப் பண்ண சொல்லி கட்டாயப்படுத்தி உள்ளார்.

அதோடு மட்டுமல்லாது தன்னுடன் வெஸ்ட்மின்ஸ்டர் ஸ்டேஷனுக்கு வருமாறு வற்புறுத்தி கடத்துவதற்கு முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்தப் பெண் சாதுரியமாக அவரிடம் இருந்து நழுவி ரெயில்வே ஊழியரிடம் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில் “சிசிடிவி காட்சிகளில் பதிவான அவரது புகைப்படத்தை வெளியிட்டுள்ளோம். அவர் பற்றிய தகவல் யாருக்கேனும் தெரியவந்தால் எங்களிடம் தெரிவிக்கலாம்” என கூறியுள்ளனர்.

Categories

Tech |