பட்டப்பகலில் தாய் மகள் இருவரையும் ரவுடிகள் சரமாரியாக வெட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அமைந்தகரை வெள்ளாளர் தெருவைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவர் கார் ஓட்டுனர். இவரின் மனைவி ஜெயந்தி மகள் மோனிகா. இன்று காலை தாய் மற்றும் மகள் வீட்டில் இருந்த போது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து அரிவாளால் இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளனர். ஜெயந்தி மற்றும் மோனிகா இருவரின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து பார்த்த போது ரத்த வெள்ளத்தில் மிதந்ததை கண்டு உடனே இருவரையும் கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இருந்தும் ஜெயந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மோனிகா காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார் இதையடுத்து அமைந்தகரை போலீசார் அங்கு உள்ள சிசிடிவி பதிவுகளை பார்த்து அடையாளம் தெரியாது தப்பி ஓடிய நபர்களை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் வீடு புகுந்து வெட்டிய ரவுடிகளின் செயல் அப்பகுதி மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.