Categories
தேசிய செய்திகள்

பட்டப்பகலில் பயங்கரம்!…. கை, மார்பகம் உட்பட பெண்ணை சரமாரியாக வெட்டிய நபர்…. நொடியில் பறிபோன உயிர்…. பரபரப்பு….!!!!

பீகார் பாகல்பூர் பிர்பைண்டியை சேர்ந்த அசோக்யாதவ் என்பவரின் மனைவி நீலம் தேவி(40). இந்த தம்பதியினர் மளிகை கடை வைத்து நடத்தி வந்தனர். இவர்கள் அதே ஊரைச் சேர்ந்த ஷகீல் அகமது என்பவரிடம் கடன் வாங்கியிருந்தனர். ஒரு மாதத்துக்கு முன்னதாக பணத்தை திருப்பி கொடுப்பது தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நீலம் தேவி தன் மகனுடன் பக்கத்திலுள்ள சந்தையில் பொருட்கள் வாங்க சென்றுள்ளார். அப்போது அங்கு ஷகீல் தன் சகோதரர் முகமது ஜூதினுடன் வந்துள்ளார்.

அங்கு ஏற்பட்ட தகராறில் ஷகீல் தன் சகோதரருடன் சேர்ந்து சந்தையில் அனைவர் முன்னிலையிலும் நீலம் தேவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி உள்ளனர். மேலும் நீலம் தேவியின் கை,காது மற்றும் மார்பகங்களை சரமாரியாக வெட்டினார். பிறகு அவர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர். இதற்கிடையில் நீலம் தேவி படுகாயங்களுடன் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி நீலம் தேவி இறந்தார். அப்பெண் இறப்பதற்கு முன்பு கொலையாளியின் பெயரை காவல்துறையினரிடம் கூறியதாக தெரிகிறது.

Categories

Tech |