பெங்களூருவில் பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும் ஒரு சாலையில் ரியல் எஸ்டேட் அதிபர் கொடூரமாக வெட்டி கொல்லப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் உள்ள ஆவலஹள்ளி ராமமூர்த்தி நகரில் ரியல் எஸ்டேட் அதிபர் வெங்கடேஷ் என்பவரை பயங்கர ஆயுதங்களுடன் ஆட்டோவில் வந்த கும்பல் ஒன்று வெட்டிக் கொன்றுள்ளனர். கொடூர சம்பவத்தின் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, அந்த வீடியோவில் ஒரு ஆட்டோவில் 5 ஆண்கள் பட்டாகத்தி, கூர்மையான ஆயுதங்களால் ஒரு நபரை சரமாரியாக வெட்டி விட்டு பின்னர் ஆட்டோவில் ஏறி தப்பி செல்லும் வீடியோ காட்சிகள் பதிவாகி உள்ளது. தற்போது முக்கிய குற்றவாளி உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த கொலைக்கு தொழில் போட்டி காரணமாக இருக்குமா? என்ற ரீதியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.