Categories
மாநில செய்திகள்

பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.75 ஆயிரம் ஊக்கத்தொகை…. நாளையே கடைசி நாள்…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பட்டதாரி இளைஞர்களின் திறமைகளை மேம்படுத்தி அரசு பயன் படுத்தும் நோக்கத்தில் அரசு புத்தாய்வு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பட்டதாரி இளைஞர்களுக்கு தொழில் முறை மற்றும் கல்வி அடிப்படையில் இரண்டு வருடங்களுக்கு ஊக்கத் தொகையுடன் பயிற்சி வழங்கப்படும். இளநிலை மற்றும் முதுகலை படித்த பட்டதாரிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ஊக்கத்தொகையாக 75 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.

தமிழக முதல்வரின் புத்தாய்வு திட்டத்தின் கீழ் தொழில்முறை மற்றும் கல்வி அடிப்படையில் இளம் பட்டதாரிகளை தேர்வு செய்து ஊக்கத் தொகையுடன் இரண்டு வருடங்கள் அரசு பயிற்சி அளிக்கும். அவர்கள் அனைவரும் மாநில அரசின் முதன்மை மற்றும் முன்னுரிமை திட்டங்களை செயல்படுத்துவதில் ஈடுபடுத்தப்படுவார்கள். அதுமட்டுமல்லாமல் முதல்வர் அலுவலகம் சம்பந்தப்பட்ட துறைகளிலும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதில் ஒரு துறைக்கு இரண்டு பேர் என்ற அடிப்படையில் 24 பேர் மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் கண்காணிப்பு மையத்திற்கு 6 பேர் தேர்வு செய்யப்படுவர்.

இதில் விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் பொறியியல், மருத்துவம், சட்டம்,வேளாண்மை மற்றும் கால்நடை மருத்துவம் ஆகியவற்றில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்பது அவசியம். அதனைப்போலவே கலை மற்றும் அறிவியல் முதுகலைப் பட்டம் பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் தமிழ் மொழி அறிவு கட்டாயம். இதில் விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் 22 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 35 வயது வரையும், BC, MBC இப்பிரிவினர் 33 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் தேர்வு, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் தேர்வு நடைபெறும். இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதந்தோறும் 65 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை கிடைக்கும். இதனைத் தவிர போக்குவரத்து, தொலைபேசி மற்றும் இணைய வசதிகள் ஆகியவற்றை இருக்கு கூடுதலாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் www.tn.gov.in/tncmfp அல்லது www.bim.edu/tncmfp என்ற இணையதளம் மூலம் ஜூன் 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

Categories

Tech |