Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“பட்டப் பகலில் உலா வந்த ஒற்றை யானை”… பீதியில் மலை கிராம மக்கள்…!!!!!

கொடைக்கானல் தாலுகா வில்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பேத்துப்பாறை, அஞ்சு வீடு, கணேசபுரம், பள்ளங்கி, கோம்பை போன்ற மலை கிராமங்களில் கடந்த சில மாதங்களாக காட்டு யானை ஒன்று சுற்றி திரிந்த வண்ணம் இருக்கிறது. வீடுகளை சேதப்படுத்துவது மட்டுமல்லாமல் விளை நிலங்களையும் காட்டு யானை சேதப்படுத்தி வருகின்றது. இந்த சூழலில் நேற்று காலை 9 மணி அளவில் பேத்துப்பாறை கிராமத்திற்குள் ஒற்றை யானை உலா வந்திருக்கின்றது. அந்த வழியாக சென்ற பள்ளி மாணவ மாணவிகள் யானையை கண்டு அதிர்ச்சடைந்துள்ளனர்.

மேலும் உயிருக்கு பயந்து அருகே இருந்த வீட்டிற்குள் அடைக்கலம் புகுந்தனர். இதே போல மலை கிராம மக்களும் பீதியடைந்திருக்கின்றார்கள். இது பற்றிய தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு விரைந்து வந்துள்ளனர். அதன்பின் பட்டாசு வெடித்தும் ஒலி எழுப்பியும் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டியுள்ளனர். பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்ற இந்த ஒற்றை காட்டு யானை அங்கிருந்து நிரந்தரமாக விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றார்கள்.

Categories

Tech |