மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள டௌராலா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 19-ஆம் தேதி ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. அதாவது பட்ட பகலில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை 2 பேர் கொடூரமான முறையில் அடித்து தரையில் இழுத்துச் செல்கின்றனர். அந்தப் பெண் தனக்கு உதவுமாறு கண்ணீர் விட்டு கதறி அழுகிறார். இந்த சம்பவத்தை ஒரு கூட்டமே சுற்றி நின்று வேடிக்கை பார்க்கிறது. இருப்பினும் வேடிக்கை பார்க்கும் கூட்டம் அந்த பெண்ணுக்கு உதவாமல் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் பெண்ணை சித்திரவதை செய்த 2 பேரின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன் பிறகு பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மனநல மருத்துவ மனையில் சேர்த்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகளின் படி 2022-ம் ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை பெண்களுக்கு எதிராக உத்தர பிரதேச மாநிலத்தில் 56,083 குற்ற வழக்குகள் பதிவாகி இருக்கிறது. இதேபோன்று மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த வருடம் மட்டும் 31,000 குற்ற வழக்குகள் பெண்களுக்கு எதிராக பதிவாகி இருக்கிறது.
#MeerutPolice#Uppolice pic.twitter.com/yNtJS80W1U
— MEERUT POLICE (@meerutpolice) September 25, 2022