வெல்டிங் பட்டறையில் திருடி 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கிழக்கு காவல் நிலையத்திற்கு மேலக்காவேரி பகுதியில் அமைந்துள்ள வெல்டிங் பட்டறையில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக புகார் வந்துள்ளது. அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா உத்தரவின்படி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன், கிழக்கு இன்ஸ்பெக்டர் அழகேசன், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்திவாசன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராஜா, தலைமை காவலர் பாலசுப்பிரமணியன், சுரேஷ், நாடிமுத்து ஆகியோர் கொண்ட தனிப்படை குழு தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அந்த விசாரணையில் முப்பக்கோவில் பகுதியை சேர்ந்த அமர்நாத், நிஷாந்த் ஆகிய இருவரும் வெல்டிங் பட்டறையில் பொருட்களை திருடி என்று தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த பொருட்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் புகார் அளித்து 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய குழுவினருக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டியுள்ளார்.