Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பட்டாக்கத்தியை ரயில் நடைமேடையில் உரசியபடி சென்ற கல்லூரி மாணவர்கள்”…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!!!!

ரயிலில் படியில் தொங்கியபடி நடைமேடையில் கத்தியை உரசிய படி சென்ற கல்லூரி மாணவர்களின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சென்னை மாவட்டத்திலுள்ள வேளச்சேரியில் இருந்து அரக்கோணம் நோக்கி செல்லும் மின்சார ரயிலில் சில கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் மேற்கொண்டார்கள். மேலும் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த கல்லூரி மாணவர்களில் ஒருவர் கையில் இருந்த பட்டா கத்தியை ரயில் பெட்டியில் தட்டியதுடன் நடைமேடையில் உரசியபடி பயணம் மேற்கொண்டார்.

இதனை நடைமேடையில் நின்ற பயணிகளில் ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் ரயில்வே போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து அந்த வீடியோ காட்சிகளைவைத்து நடை மேடையில் பட்டாகத்தி மற்றும் கால்களை உரசியபடி சென்ற கல்லூரி மாணவர்கள் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories

Tech |