Categories
மாநில செய்திகள்

பட்டாசுகள் விற்பதற்கும் வெடிப்பதற்கும் தடை…. 4 மாநிலங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்….!!!!

தமிழகத்தில் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று 4 மாநில முதல்-மந்திரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 4 ஆம் தேதி அன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. அதனால் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று டெல்லி, ஒடிசா, ராஜஸ்தான், ஹரியானா போன்ற 4 மாநில முதல்-மந்திரிகளுக்கும்  முதல்வர் முக. ஸ்டாலின் கடிதம் மூலமாக கோரிக்கை விடுத்துள்ளார்.

அந்த கடிதத்தில், நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்றால் சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் பட்டாசு தயாரிக்கும் தொழிலை நம்பி 8 லட்சம் பேர் இருக்கின்றனர். காற்று மாசுபடுதல் காரணமாக தங்கள் மாநிலங்களில் பட்டாசு விற்பனை மற்றும் வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டதை புரிந்து கொள்கிறேன். ஆனால் சுப்ரீம் கோர்ட் மற்றும் பசுமை தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதலின்படி, தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகளுக்கு அனுமதி தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |