Categories
மாநில செய்திகள்

பட்டாசு ஆலைகள் அதிரடி அறிவிப்பு… பதற்றத்தில் 2 லட்சம் தொழிலாளர்கள்…. நிலை என்ன?….!!!!

சிவகாசி பட்டாசு ஆலைகள் மார்ச் 21ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பட்டாசு என்றாலே நமக்கெல்லாம் ஞாபகம் வருவது விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி தான். இதனை  சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய அளவிலான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறதுஇதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

இந்த தொழிற்சாலையில் அடிக்கடி உயிரிழப்புகளும், விபத்துகளும் ஏற்படுகிறது. கடந்த ஆண்டு நிகழ்ந்த பத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதனால் இனி வரும் காலங்களில் பட்டாசுகளை தடுக்க உரிமம் இல்லாத பட்டாசு ஆலைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒவ்வொரு பட்டா சாலை விபத்தின் போது கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் தமிழக அரசு துறை சார்ந்த தனி குழுவை அமைத்து பட்டாசு ஆலைகளை கண்காணித்து பட்டாசு தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த சூழ்நிலையில் பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபாடு இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து அதிக நச்சு மற்றும் புகை,  சத்தத்தை எழுப்பும் பட்டாசு போன்றவற்றை  உற்பத்தி செய்ய கடுமையான தடை விதிக்கப்பட்டிருந்தது. அதேபோல் சரவெடி பேன்சி ரக பட்டாசுகள் வெடிமருந்து கட்டுப்பாடு அதிகாரிகள் திடீர் தடை விதித்துள்ளனர்.

இதனால் 50% மேற்பட்ட பாடசாலைகள் முழுமையாக இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் வெடிபொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வைத்திருப்பவர்களை போலீசார் அதிரடியாக  கைது செய்கின்றனர். மேலும் சோதனை என்ற பெயரில் அதிகாரிகள் பட்டாசு ஆலைகளில் கெடுபிடி காட்டுவதாக ஆலை உரிமையாளர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர். இதன் காரணமாக பட்டாசு உற்பத்தி தொழிலில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்து சுற்றுச்சூழல் விதியிலிருந்து பட்டாசு தொழிலுக்கு விலக்கு அளிக்க வேண்டும். மேலும் சரவெடி, பேரியம், நைட்ரேட் மீதான தடையை நீக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழன் பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் நாளை மறுநாள் இருபத்தி ஒன்றாம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 250 க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் கலந்து கொள்ளும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் தமிழக அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது.

Categories

Tech |