Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 5 பெண்கள் உயிரிழப்பு

மதுரை மாவட்டம் செங்குளம் கிராமத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பெண்கள் உடல் கருகி பலியாகினர். 3 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் அருகே மதுரை மாவட்ட எல்லையான பேரையூர் தாலுகாவிற்கு உட்பட்ட செங்குளம் கிராமத்தில் அழகர்சாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. பட்டாசு ஆலையில் சரவெடிகள் மற்றும் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. இன்று காலை பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தயாரிப்பு வேலையில் ஈடுபட்டிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டு இரண்டு அறைகளுக்கும் வேகமாக பரவியதில் பட்டாசுகள் வெடித்து சிதறின.

அப்போது பணியில் இருந்த ஐந்து பெண்கள் சம்பவ இடத்திலேயே கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மீட்புப் பணிக்காக விருதுநகர் மற்றும் சிவகாசியிலிருந்து விரைந்து வந்த தீயணைப்பு வாகனங்கள் மூலம் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். மூன்று பேரு காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Categories

Tech |