Categories
மாநில செய்திகள்

பட்டாசு ஆலை விபத்து…. முதல்வர் ஸ்டாலின் நிவாரணத் தொகை அறிவிப்பு….!!!!

ஸ்ரீவில்லிபுத்தூர் நாகலாபுரத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையை முருகன் என்பவர் நடத்தி வருகிறார். இந்த பட்டாசு தொழிற்சாலை ஆரம்பித்து கிட்டத்தட்ட 2 வருடங்கள் ஆகிவிட்டது. இந்த பட்டாசு தொழிற்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். புத்தாண்டை முன்னிட்டு 80 பேர் வேலை பார்த்து வந்தனர். இந்த பட்டாசு தொழிற்சாலையில் கிட்டத்தட்ட 23 அறைகள் உள்ளது. இந்தநிலையில் நேற்று காலையில் கெமிக்கல் கலக்கும் வரையில் திடீரென மருந்துப் பொருள்களை கலக்கும் போது வெடிவிபத்து ஏற்பட்ஏற்பட்டு பயங்கர சத்தம் கேட்டது. அந்த அறை முழுவதும் தரைமட்டமானது.

மேலும் கெமிக்கல் கலக்கும் கட்டிடத்தில் மொத்தம் 7 அறைகள் உள்ளன. அந்த அறையில் 20 பேர் பணியாற்றிய நிலையில், அந்த அறை முழுவதும் தரைமட்டமானது. தொடர்ந்து அருகில் இருந்த அறைகளில் இருந்து வேலை பார்த்தவர்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று வெளியே ஓடிவிட்டனர். இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் ஆம்புலன்ஸ் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து இந்த வெடி விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியது.

இந்த நிலையில் விருதுநகர் பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 3,00,000 ரூபாய் நிவாரண உதவி வழங்க தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் 5 பேர் இறந்த துயர செய்தியை கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன். இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா 3,00,000 -மும் காயம்பட்டவர்களுக்கு தலா 1,00,000 ரூபாயும் உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |