Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பட்டாசு ஆலை வெடி விபத்து… பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு…!!!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலையில் நேற்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. அதனால் அங்கிருந்த 15 அறைகள் இடிந்து தரைமட்டமாகின. அங்கு வேலை செய்துகொண்டிருந்த பணியாளர்கள் அனைவரும் வெடி விபத்தில் சிக்கினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அந்தக் கோர விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது வரை வெடி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 30 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களில் 3 பேர் நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளது.

Categories

Tech |