Categories
மாநில செய்திகள்

பட்டாசு உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம்… வெளியான அறிவிப்பு…!!!

பட்டாசு உற்பத்தி என்பது சுற்றுப்புறச் சூழல் விதிகளுக்கு உட்பட்டதாக உள்ளது. இதிலிருந்து விலக்களிக்குமாறு சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்த சூழலில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காற்று மாசுவை கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்க வேண்டும் என்றும் பல்வேறு பொது நல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் வரும் மார்ச் 21 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக சிவகாசி தமிழன் பட்டாசு வெடி உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதியிலிருந்து விலக்கு அளிக்க கோரி உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். மேலும் பேரியம், நைட்ரேட் சர வெடி பட்டாசு தயாரிக்க விதித்த தடையை நீக்கக் கோரியும் 300 ஆலைகள்  வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

Categories

Tech |