Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பட்டாசு கடையில் திடீர் வெடிவிபத்து…. தாத்தாவுடன் உயிரிழந்த 2 பேரன்கள்..!!

வேலூர் மாவட்டத்தில் பட்டாசு கடையில் திடீரென நிகழ்ந்த வெடி விபத்தில் 2 குழந்தைகள் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், லத்தேரி பேருந்து நிலையம் அருகே உள்ள பட்டாசு கடையில் திடீரென நிகழ்ந்த வெடி விபத்தில் 2 குழந்தைகள் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர். இந்த வெடி விபத்தில் கடை உரிமையாளர் மோகன் மற்றும் அவரது இரண்டு பேரக்குழந்தைகள் உயிரிழந்தனர். கடை முழுமையாக எரிந்து சேதமடைந்தது. மேலும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |