Categories
தேசிய செய்திகள்

“பட்டாசு வெடிக்காதீங்கடா” கேட்காத குழந்தைகள்…. வியாபாரியின் கொடூரமான செயல்…!!!

உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள பண்டா மாவட்டத்திற்குட்பட்ட கைலாஷ்பூரி பகுதியில் குழந்தைகள் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்குத் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்து வரும் நபர் ஒருவர், பட்டாசு வெடிக்கக் கூடாது என்று அந்த குழந்தைகளிடம் கூறியுள்ளார். ஆனால் கேட்காமல் குழந்தைகள் தொடர்ந்து பட்டாசு வெடித்துக் கொண்டிருந்துள்ளனர். இதனால் கோபமடைந்த அந்த நபர் ஆசிட் பாட்டிலை எடுத்து குழந்தைகள் மீது வீசியுள்ளார்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக குழந்தைகள் அங்கிருந்து தப்பிச் சென்றதால், பக்கத்தில் இருந்த 2 பெண்கள் மீது ஆசிட் பட்டு தீக்காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனே இரண்டு பெண்களையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.  இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு செல்வதற்குள் வியாபாரி அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதனையடுத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அந்த நபரை தேடி வருகின்றனர்.

Categories

Tech |