Categories
மாநில செய்திகள்

பட்டாசு வெடிக்க முடியலன்னு கவலையா… இதோ வந்துருச்சி பசுமை பட்டாசு… இனி கவலை வேண்டாம்…!!!

பொதுமக்கள் பசுமை பட்டாசுகள் வெடித்தால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என்று தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்க கூடிய வகையில் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகள் வெடிப்பதற்கு முதல்-மந்திரி எடியூரப்பா தடை விதித்துள்ளார். அதற்கு இந்து மத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், பசுமை பட்டாசுகளை மட்டும் வெடிப்பதற்கு அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் பசுமை பட்டாசுகள் என்ன என்பது பொது மக்களுக்கு தெரியவில்லை. சாதாரண பட்டாசுகளில் லிதியம் மற்றும் பேரியம் போன்ற ரசாயன பொருட்கள் சேர்க்கப்பட்ட தயாரிக்கப்படுகின்றன. ஆனால் பசுமை பட்டாசுகளில் அவ்வாறு எந்த ஒரு ரசாயன பொருட்களும் சேர்க்கப்படுவது இல்லை.

அதனால் இப்போது சதவீதம் முதல் 90 சதவீதம் வரையில் காற்று மாசு குறைகிறது. அதே சமயத்தில் ஒளி மற்றும் ஒலியில் எந்தவித மாறுபாடும் இருக்காது. அதுமட்டுமன்றி பசுமை பட்டாசுகளின் பாக்கெட்கள் மீது முத்திரை மற்றும் க்யூஆர் கோடு ஆகியவை அச்சிடப்பட்டு வரும். இதுபற்றி கர்நாடக மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறுகையில், “பசுமை பட்டாசுகள் தற்போது சந்தைக்கு வர வில்லை. அதனால் பட்டாசு வெடிப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும். அவ்வாறு பட்டாசு வெடிக்க விரும்பினால் பசுமை வகை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். இந்த பசுமை பட்டாசுகள் கடந்த வருடம் அறிமுகம் செய்யப்பட்டவை என்பதால், இன்னும் சந்தைக்கு அதிகமாக வரவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |