Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பட்டாசு வெடித்த போது…. 8 வீடு தீயில் கருகி நாசம்…. விழுப்புரத்தில் பரபரப்பு….!!!!

பட்டாசு வெடித்த போது எட்டு வீடுகள் தீயில் கருகி நாசமானது.

விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்த சமயத்தில் பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட தீ விபத்தில் ஹரி கிருஷ்ணன், சங்கர், கோவிந்தம்மாள், ராஜா, ரமேஷ், சுகுமார் ஆகியோரது குடிசை வீடுகளும் தீ பற்றி எரிந்துள்ளது. இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்துள்ளனர்.

இருப்பினும் வீடுகளில் உள்ள பிரிட்ஜ், டிவி, கட்டில், பீரோ, மிக்சி, கிரைண்டர், புது துணிகள் மற்றும் பாத்திரங்கள் என அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமானது. இதன் மதிப்பு சுமார் 10 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதே போல் திண்டிவனம் பகுதியில் வசித்து வரும் ஜோதி என்பவருடைய குடிசை வீடும் பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தீப்பொறியினால் எரிந்து சாம்பலானது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |