Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பட்டா கத்தியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 7 பேர் கைது ….!!

விருதுநகரில் பட்டா கத்தியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய கல்லூரி மாணவர்கள் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் கத்தாளம்பட்டி தெருவைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சிவலிங்கம் தனது பிறந்தநாளை சக நண்பர்களுடன் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர் அதனை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பட்டையுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சிவலிங்கம் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து பட்டாக்கத்தி செல்போன்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Categories

Tech |