அரசுக்கு சொந்தமான நிலத்திற்கு பட்டா வழங்க கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் தாலுகா அலுவலகம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டமானது மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வடமதுரை பகுதியில் இருக்கும் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைத்து வாழ்கின்ற மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.
என்பதை வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின் இவர்கள் வேடசந்தூர் அம்பேத்கார் சிலையிலிருந்து மார்க்கெட் சாலை வழியாக ஊர்வலமாக வந்துள்ளனர். கோரிக்கையை வலியுறுத்தி ஊர்வலமாக சென்றுள்ளனர்.