Categories
தேனி மாவட்ட செய்திகள்

பட்டா வழங்க வேண்டும்…. கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை…. போராட்டத்தால் பரபரப்பு….!!

கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆண்டிபட்டியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தேனி மாவட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆண்டிபட்டியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் போடிதாசன்பட்டியை அடுத்துள்ள மணியகாரன்பட்டி பகுதியை சேர்ந்த மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

இதற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் கோபால் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து மாநில செயலாளர் நடராஜ், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பங்கேற்றுள்ளனர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |