பட்டா வழங்கக் கோரி பொதுமக்கள் ஆர்.டி.ஓ அலுவலகத்திருக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2015- ஆம் ஆண்டு சங்கராபுரத்தில் வசிக்கும் மக்களுக்கு அரசுக்கு சொந்தமான 11/2 ஏக்கர் நிலத்திற்கான பட்டா வழங்கப்பட்டுள்ளது . ஆனால் இந்த பட்டாவில் பாதை இல்லாததால் ஆத்திரமடைந்த மக்கள் தேவகோட்டை தி.மு.க ஒன்றிய செயலாளர் பூபாலசிங்கம் மற்றும் கல்பனா ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆர்.டி.ஓ பிரபாகரன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பிறகு மொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.