Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பட்டா வழங்க வேண்டும்…. விவசாய சங்கத்தினரின் ஆர்ப்பாட்டம்…. திண்டுகல்லில் பரபரப்பு…!!

விவசாய சங்கத்தினரின் ஆர்ப்பாட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி, குளத்துரோடு ரவுண்டானாவில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினரின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாநில துணைத்தலைவர் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் மத்தியகுழு உறுப்பினர், மாவட்ட தலைவர், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தும்பலப்பட்டியிலுள்ள உபரி நிலங்களை பராமரித்து வரும் விவசாயிகளுக்கு பட்டா வழங்க கோரி கோஷம் எழுப்பியுள்ளனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தும்பலப்பட்டி விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் என ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.

அதன்பின் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென குளத்துரோடு ரவுண்டானாவிலிருந்து பழனி சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக செல்வதற்காக முயன்றுள்ளனர். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், அவர்களை தடுத்து நிறுத்தியதால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் புதுதாராபுரம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபடத் தொடங்கினார். அதன்பின் அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை அங்கிருந்த அனுப்பியுள்ளனர். பின்னர் பழனி சப்-கலெக்டர் அலுவலகத்தில் விவசாய சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனுவை கொடுத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |