Categories
உலக செய்திகள்

பட்டினியால் தவிக்கும் மக்கள்… “ஆப்கானுக்கு உதவுங்க”… ஐநா கோரிக்கை!!

ஆப்கானிஸ்தானில் பொருளாதார நிலை நாளுக்கு நாள் மோசம் அடைந்து வருகிறது ..

ஆப்கானிஸ்தானில் பொருளாதார நிலைமை நாளுக்குநாள் மோசமடைந்து பட்டினிக் கொடுமை தலை விரித்தாடுகிறது. சர்வதேச நாடுகள் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என ஐநா கோரிக்கை விடுத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் பொருளாதார நெருக்கடி  அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 99 சதவித விழுக்காடு மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் தள்ளப்பட்டுள்ளனர். 35 லட்சத்திற்கு அதிகமானோர் உள்நாட்டிலேயே அகதிகளாக பல்வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். மொத்த மக்கள் தொகையில் சரி பாதிக்கு மேலாக 2 கோடியே 80 லட்சம் பேர் உணவு இல்லாமல் அவதிப்படுவதாக உலக உணவு திட்ட அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. வேலை இல்லாமல் மிகுந்த சோர்வு அடைந்து இருப்பதாக ஆப்கான் மக்கள் புலம்புகின்றனர்.

பல்வேறு தொண்டு நிறுவனங்கள் வறுமை மற்றும் பட்டினி கொடுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்குபணம்  நிவாரண பொருட்கள் வழங்கி வருகின்றனர். உலக நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கு உதவ வேண்டும் என்று ஐநா கோரிக்கை விடுத்துள்ளது. ஜெர்மன் அமைப்புகளும், காபூலில் நிவாரண பொருட்கள் விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் பரிதவிப்புடன் காத்திருந்த காட்சிகள் சோகத்தை வரவழைக்கின்றன.

இடம்பெயர்ந்த இலட்சக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளுக்கு செல்ல ஐ.நா உதவ வேண்டுமென்று தாலிபான் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. சுமார் 3 ஆயிரத்து 200 கோடி ரூபாய் நிதியை தாலிபான் அரசு பயன்படுத்த முடியாத வகையில் சர்வதேச நாணய நிதியம் முடக்கி வைத்த நிலையில், அது குறித்து பரிசீலிக்க வேண்டும் என ஐ.நா பொதுச் செயலாளர்  அண்டோனியா குட்டெர்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேபோல ஆப்கானில் மத்திய வங்கிக்கு சொந்தமான 74 ஆயிரம் கோடி ரூபாய் வெளிநாட்டு சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. இவற்றில்பெரும்பாலும் அமெரிக்காவில் உள்ள நிலையில்  அவற்றை விடுவிக்கும் எண்ணம் இல்லை என்று அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |