நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அதிலும் சில மக்கள் உண்ண உணவு இல்லாமல் தவித்து வரும் அவலநிலை நாட்டில் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு அரசு பல்வேறு நிதி உதவிகளை வழங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக சில மாநில அரசுகள் மக்களுக்கு பல நிதி உதவிகளை வழங்குவதில் சிறப்பாக செயலாற்றி வருகிறது.
இந்நிலையில் நிதி ஆயோக்கின் மாநிலங்களின் வளர்ச்சி தரவரிசையில் இரண்டாம் இடம் பிடித்த தமிழ்நாடு, பட்டினியை ஒழிப்பதில் முதலிடம் பிடித்துள்ளது. ஆனால் அந்நிய முதலீட்டை ஈர்ப்பதில் முதலிடத்தில் உள்ள குஜராத், ஜிடிபியில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிரம் ஆகியவை பட்டினியை தடுப்பதில் மிகவும் பின்தங்கியுள்ளன. இதை ஒப்பிட்டு தொழில் முனைவோரும் தன்னம்பிக்கை பேச்சாளருமான சுரேஷ் சம்பந்தம் முகநூலில் வரைபடத்துடன் விமர்சித்துள்ளார்.